கார் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி
விருதுநகரில் கார் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.
விருதுநகர்,
விருதுநகர் அருகே உள்ள குருமூர்த்தி நாயக்கன் பட்டியை சேர்ந்தவர் இளையராஜா (வயது42). இவர் சிவகாசி அருகே விளாம்பட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று காலை அவர் தனது இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்றுகொண்டிருந்த போது விருதுநகர் சிவகாசி ரோட்டில் மத்தியசேனை அருகே இவரது இரு சக்கர வாகனத்தின் மீது எதிரே வந்த கார் மோதியதில் படுகாயம் அடைந்த இளையராஜா சம்பவ இடத்திலேயே பலியானார். இதுபற்றி அவரது மனைவி சித்ரா (37) கொடுத்த புகாரின் பேரில் ஆமத்தூர் போலீசார் சிவகாசி காமராஜபுரத்தை சேர்ந்த கார் டிரைவர் கிருஷ்ணசாமி (42) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Related Tags :
Next Story