தீப்பெட்டி தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து


தீப்பெட்டி தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து
x
தினத்தந்தி 14 Aug 2021 1:06 AM IST (Updated: 14 Aug 2021 1:06 AM IST)
t-max-icont-min-icon

சாத்தூர் அருகே தீப்பெட்டி தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.8 லட்சம் பொருட்கள் எரிந்து நாசமானது.

சாத்தூர், 
சாத்தூர் அருகே தீப்பெட்டி தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.8 லட்சம் பொருட்கள் எரிந்து நாசமானது. 
தீவிபத்து 
சாத்தூர் அருகே சடையம்பட்டி கிராமத்தில் ஹரிகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான தீப்பெட்டி ெதாழிற் சாலை செயல்பட்டு வருகிறது.  இங்கு சுமார் 50-க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் பணி முடிந்து அனைவரும் சென்ற பின் இரவு நேரத்தில் மின்கசிவு காரணமாக தீப்பெட்டி ஆலையில் உள்ள ஒரு அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கிருந்த தீப்பெட்டி பண்டல்கள் மற்றும் தீப்பெட்டி தயாரிக்க பயன்படும் குச்சி மூடைகள் அனைத்தும் தீயில் எரிந்து கருகி நாசமானது.
ரூ.8 லட்சம் சேதம் 
இந்த தீ விபத்து குறித்து சாத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த சாத்தூர் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்க கடுமையாக போராடினர்.
 தீயை அணைக்க முடியாததால் அருகிலுள்ள சிவகாசி தீயணைப்புத்துறையினர் வரவழைத்து பல மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இரவு நேரத்தில் தீவிபத்து நடந்ததால் பணியாட்கள் யாரும் இல்லை. இதனால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
 தீவிபத்தில் ரூ.8 லட்சம் மதிப்பிலான தீப்பெட்டி பண்டல்கள் மற்றும் தீப்பெட்டி தயாரிக்க பயன்படும் தீக்குச்சிகள் எரிந்து நாசமானது. இந்த சம்பவம் குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Tags :
Next Story