2 பேர் தற்கொலை


2 பேர் தற்கொலை
x
தினத்தந்தி 14 Aug 2021 1:42 AM IST (Updated: 14 Aug 2021 1:42 AM IST)
t-max-icont-min-icon

தனித்தனி சம்பவங்களில் 2 பேர் தூக்குப்போட்டு தற்ெகாலை செய்துகொண்டனர்.

சிவகாசி, 
சிவகாசி அருகே உள்ள நமஸ்கரித்தான்பட்டியை சேர்ந்தவர் முருகன் மகன் கார்த்திக் (வயது 28). விவசாயி. இந்த நிலையில் அவருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நோய் பாதிப்பு அதிகமானதால் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை முருகன் திருத்தங்கல் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதேபோல் செங்கமலநாச்சியார்புரம் சிவாஜி கணேசன் காலனியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (37). இவர் அச்சகத்தில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் தனது வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் திருத்தங்கல் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பிரிசோதனைக்காக சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

Related Tags :
Next Story