கர்ப்பமானதால் பள்ளி மாணவி சாவு: தூக்குப்போட்டு சித்தப்பா தற்கொலை


புதுக்கோட்டை
x
புதுக்கோட்டை
தினத்தந்தி 14 Aug 2021 1:58 AM IST (Updated: 14 Aug 2021 1:58 AM IST)
t-max-icont-min-icon

கொத்தமங்கலத்தில் பள்ளி மாணவி கர்ப்பமானதால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் திடீர் திருப்பமாக மாணவியின் சித்தப்பா தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கீரமங்கலம்
மாணவி கர்ப்பம்
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் கொத்தமங்கலம் பகுதியை சேர்ந்த ஒரு கூலித் தொழிலாளியின் மகள் தனது சித்தப்பா வீட்டில் தங்கி இருந்து அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பிரேத பரிசோதனையின் முடிவில் மாணவி கர்ப்பமாக இருந்தது தெரிய வந்தது. 
இதுகுறித்து ஆலங்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு வடிவேல், கீரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் ஆலங்குடி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமலதா ஆகியோர் விசாரணை நடத்தினர்.
பின்னர் மாணவியின் சித்தப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவரை தேடி வந்தனர்.
தற்கொலை
கடந்த 2 நாட்களாக தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான குழுவினர் அவரை தேடி வந்த நிலையில் கொத்தமங்கலத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் எதிரே உள்ள காட்டுப் பகுதியில் மாணவியின் சித்தப்பா நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து ெகாண்டது தெரிய வந்தது. 
பின்னர் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை செய்து கொண்டவருக்கு மனைவி மற்றும் 2 வயதில் ஒரு குழந்தையும் உள்ளனர்.

Next Story