உடல் உறுப்புகளை தானம் செய்கிறேன்; பசவராஜ் பொம்மை அறிவிப்பு


உடல் உறுப்புகளை தானம் செய்கிறேன்; பசவராஜ் பொம்மை அறிவிப்பு
x
தினத்தந்தி 14 Aug 2021 3:11 AM IST (Updated: 14 Aug 2021 3:11 AM IST)
t-max-icont-min-icon

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தனது உடல் உறுப்புகளை தானம் செய்தார்.

பெங்களூரு: உலக உடல் உறுப்புகள் தான தினத்தையொட்டி முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

மண்ணோடு மண்ணாக கலந்துவிடும் நமது உடல் உறுப்புகளை தானம் செய்தால், அது இன்னொரு உயிரை காக்க உதவும். அதனால் நான் எனது உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்து உள்ளேன். அதற்காக எனது பெயரை பதிவு செய்கிறேன். நாம் அனைவரும் உடல் உறுப்புகளை தானம் செய்ய உறுதிமொழி ஏற்க வேண்டும்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை குறிப்பிட்டுள்ளார்.

Next Story