கர்நாடகத்தில் புதிதாக 1,669 பேருக்கு கொரோனா
கர்நாடகத்தில் திடீரென கொரோனா பாதிப்பு அதிகரிப்பு
பெங்களூரு: கர்நாடகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
கர்நாடகத்தில் நேற்று ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 332 பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதில் 1,669 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 29 லட்சத்து 26 ஆயிரத்து 401 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் கொரோனாவுக்கு மேலும் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் வைரஸ் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்து 933 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 1,672 பேர் குணம் அடைந்தனர். இதனால் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 28 லட்சத்து 66 ஆயிரத்து 739 ஆக அதிகரித்துள்ளது. 22 ஆயிரத்து 703 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.
பெங்களூரு நகரில் 425 பேர், தட்சிண கன்னடாவில் 390 பேர், மைசூருவில் 116 பேர், உடுப்பியில் 115 பேர், சிக்கமகளூருவில் 51 பேர், துமகூருவில் 69 பேர், சிவமொக்காவில் 50 பேர், குடகில் 73 பேர், ஹாசனில் 113 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பெங்களூரு நகரில் 5 பேரும், தட்சிண கன்னடா, கோலாரில் தலா 3 பேரும், பெலகாவி, சித்ரதுர்கா, ஹாசன், துமகூருவில் தலா 2 பேரும் என மொத்தம் 22 பேர் உயிரிழந்தனர்.
இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story