அடிப்படை வசதிகள் செய்யவில்லை என கூறி முட்டாஞ்செட்டி ஊராட்சி துணைத்தலைவர், உறுப்பினர்கள் தர்ணா


அடிப்படை வசதிகள் செய்யவில்லை என கூறி முட்டாஞ்செட்டி ஊராட்சி துணைத்தலைவர், உறுப்பினர்கள் தர்ணா
x
தினத்தந்தி 14 Aug 2021 3:59 AM IST (Updated: 14 Aug 2021 3:59 AM IST)
t-max-icont-min-icon

அடிப்படை வசதிகள் செய்யவில்லை என கூறி முட்டாஞ்செட்டி ஊராட்சி துணைத்தலைவர், உறுப்பினர்கள் தர்ணா

எருமப்பட்டி:
எருமப்பட்டி அருகே உள்ள முட்டாஞ்செட்டி ஊராட்சி மன்ற தலைவராக கமலபிரியா என்பவர் உள்ளார். இவர் அடிப்படை வசதிகளான சாக்கடை சுத்தம் செய்தல், சீரான குடிநீர் வழங்குதல், தெருவிளக்கு பராமரிப்பு உள்ளிட்ட பணிகளை செய்யவில்லை எனக்கூறியும், அவரை கண்டித்தும் ஊராட்சி துணைத்தலைவர் சபாரத்தினம் தலைமையில் வார்டு உறுப்பினர்கள் 4 பேர் நேற்று ஊராட்சி அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், குடிநீர் இணைப்புக்கு அரசு நிர்ணயித்த தொகையான ரூ.1,360-க்கு பதிலாக ரூ.3,360 வசூல் செய்வதாகவும், 165 குடிநீர் இணைப்புகளுக்கு பணம் வசூல் செய்துவிட்டு 25 பேருக்கு மட்டுமே குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மற்றும் ஊராட்சி மன்ற ஆணையர் தலையிட்டு நடவடிக்கை எடுத்து வேண்டும் என்றனர். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற எருமப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் குணாளன் மற்றும் போலீசார் தர்ணாவில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதன்பேரில் தர்ணா போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் ஊராட்சி மன்ற அலவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
=========

Next Story