மதுஅருந்தியதை தட்டிக்கேட்டதால் மனைவியுடன் தகராறு: வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
மதுஅருந்தியதை தட்டிக்கேட்ட மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த வெங்கத்தூர் கண்டிகை பள்ளிக்கூடத் தெருவை சேர்ந்தவர் தேவதாஸ். இவரது மகன் உத்திரகுமார் (வயது 28). கூலித்தொழிலாளி ஆவார். இவருக்கு திருமணமாகி கீர்த்தனா என்ற மனைவியும், 2 வயதில் கவிஸ்ரீ என்ற ஒரு குழந்தையும் உள்ளனர். இந்த நிலையில் குடிப்பழக்கம் கொண்ட உத்திரகுமார் அடிக்கடி குடித்துவிட்டு தன் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் உத்திரகுமார் மது அருந்தி வந்ததால், மீண்டும் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது.
இதனால் மனவேதனை அடைந்த உத்திரகுமார் தன் அறைக்குச்சென்று அங்கு உள்பக்கமாக பூட்டி விட்டு மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து மணவாளநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story