சிவகங்கை நகரில் உள்ள கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு
சிவகங்கை நகரில் உள்ள கடைகளில் குழந்தை தொழிலா ளர்கள் பணிபுரிகிறார்களா என்று அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
சிவகங்கை,
சிவகங்கை நகரில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, தொழிலாளர் துறை, குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மருத்துவத்துறை, குழந்தைகள் வளர்ச்சி திட்டம் ஆகிய துறைகள் இணைந்து சிவகங்கை நகரில் சிவகங்கையின் முதன்மை வீதிகள் பேருந்து நிலையம், அரண்மனை வாசல், நேரு பஜார், தெற்கு ராஜவீதி, காந்தி வீதிகளில் உள்ள துணிக்கடைகளில் ஆய்வு செய்தனர்.
மேலும் பல்பொருள் அங்காடிகள் மற்ற பிற கடைகளில் குழந்தை தொழிலாளர்கள் உள்ளனரா, பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற குழந்தைகள் எவரும் கடையில் பணியமர்த்தப்பட்டு உள்ளனரா என கூட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் தொழிலாளர்துறை உதவி ஆய்வாளர்கள் பேச்சிமுத்து, பிரியதர்ஷினி, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சிவகங்கை வட்டார வள மைய மேற்பார்வையாளர் பொறுப்பு ரூபா ராணி, ஆசிரியர் பயிற்றுனர்கள் காளிராசா, ஜெயப்பிரகாசம், ஆறுமுகம், கவிதா, கோவிந்தம்மாள், தனலட்சுமி, செல்வ ராணி, சிறப்பாசிரியர் இளமாறன் ஆகியோரும் மருத்துவர் ஆனந்த், குழந்தைகள் பாதுகாப்பு அலகு முத்துகண்ணு, குழந்தைகள் வளர்ச்சித்திட்ட மேற்பார்வையாளர் ஆகியோர் 2 குழுக்களாக பிரிந்து ஆய்வு மேற்கொண்டனர்.
Related Tags :
Next Story