கடனுதவி வழங்கக்கோரி நரிக்குறவ பெண்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு
கடனுதவி வழங்கக்கோரி நரிக்குறவ பெண்கள் கலெக்டாிடம் கோரிக்கை மனு வழங்கினர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் முருகேஷிடம் திருவண்ணாமலை மாவட்ட நரிக்குறவர்கள் நலச்சங்க தலைவர் என்.தேவேந்திரன் என்ற தேவா தலைமையில் நரிக்குறவ பெண்கள் நேற்று மனு அளித்தனர்.
அந்த மனுவில் திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம் கனத்தம்பூண்டி கிராமத்தில் ஓம்சக்தி நகர் பகுதியில் புதியதாக அரசு மூலம் 65-க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் மற்றும் இருளர் இன மக்களுக்கு வீடுகட்டி கொடுக்கப்பட்டுள்ளது.
இங்கு அனைவரும் வாழ்ந்து வருகிறோம். கொரோனா தொற்று காரணமாக வாழ்வாதாரம் இழந்து நரிக்குறவர்கள் மற்றும் இருளர் இன மக்கள் தவித்து வருகிறோம்.
எனவே எங்கள் வாழ்வாதாரத்திற்கு வழிவகை செய்யும் வகையில் சிறுதொழில் செய்ய வங்கி மூலம் ஒவ்வொரு குடும்பத்துக்கும் தனிநபர் கடனுதவி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
Related Tags :
Next Story