டெல் தொழிற்சாலை வரை செல்லும் அரசு டவுன் பஸ்கள்


டெல் தொழிற்சாலை வரை செல்லும் அரசு டவுன் பஸ்கள்
x
தினத்தந்தி 14 Aug 2021 7:04 PM IST (Updated: 14 Aug 2021 7:04 PM IST)
t-max-icont-min-icon

சித்தூர் செல்லும் பயணிகளுக்காக டெல் தொழிற்சாலை வரை அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

காட்பாடி

வேலூர் மாவட்டம் காட்பாடியில் இருந்து பாகாயம் வரை அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் பாகாயத்தில் இருந்து காட்பாடி வரை வரும் அரசு டவுன் பஸ்கள் வள்ளிமலை கூட்ரோடு வரை இயங்குகின்றன.

தற்போது ஊரடங்கு இருப்பதால் வெளிமாநில பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் சித்தூர் மற்றும் ஆந்திராவிற்கு செல்லும் பயணிகள் வள்ளிமலை கூட்ரோட்டில் இருந்து மாநில எல்லை வரை நடந்து சென்று அங்கு வரும் ஆந்திர பஸ்களில் ஏறி செல்கின்றனர். இதனால் பயணிகள் மிகவும் சிரமம் அடைந்தனர்.

இதனை கருத்தில் கொண்டு அரசு போக்குவரத்து கழகம், வள்ளிமலை கூட்ரோடு வரை செல்லும் சில டவுன் பஸ்களை டெல் தொழிற்சாலை வரை இயக்குகிறது.

இதனால் சித்தூர் மற்றும் ஆந்திரா செல்லும் பயணிகள் அங்கு சென்று இறங்கி அங்கு வந்து நிற்கும் ஆந்திர அரசு பஸ்களில் ஏறி செல்கின்றனர்.

Next Story