மத்திய மந்திரி முருகன் தலைமையில் மக்கள் ஆசீர்வாத யாத்திரை


மத்திய மந்திரி முருகன் தலைமையில் மக்கள் ஆசீர்வாத யாத்திரை
x
தினத்தந்தி 14 Aug 2021 9:02 PM IST (Updated: 14 Aug 2021 9:02 PM IST)
t-max-icont-min-icon

மத்திய மந்திரி முருகன் தலைமையில் மக்கள் ஆசீர்வாத யாத்திரை

கோவை

மத்திய மந்திரி எல்.முருகன் தலைமையில் மக்கள் ஆசீர்வாத யாத்திரை கோவையில் நாளை (திங்கட்கிழமை) தொடங்க உள்ளதாக பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.

கோவை வந்த பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது

ஆசீர்வாத யாத்திரை

மத்திய இணை மந்திரி எல்.முருகன் தலைமையில் தமிழகத்தில் 'மக்கள் ஆசீர்வாத் யாத்ரா' என்ற யாத்திரை 3 நாட்கள் நடக்கிறது. கோவையில் ஆசீர்வாத் யாத்திரை 16-ந் தேதி (நாளை) தொடங்குகிறது.

 நாளை மறுநாள் திருப்பூரிலும், 18-ந் தேதி சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்க ளிலும் இந்த யாத்திரை நடைபெறுகிறது. இதில், மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்து மக்களிடம் விளக்கப்படும்.

தமிழகத்திற்கு ரூ.7 லட்சம் கோடி திட்டங்களை மத்திய அரசு கொடுத்து உள்ளது. முத்ரா திட்டத்தால் நாட்டிலேயே திருப்பூர் மாவட்ட மக்கள் அதிக பயன்பெற்று உள்ளனர். மத்திய மந்திரி எல்.முருகன் கிராமத்தில் பிறந்து உழைப்பால் முன்னேறி உள்ளார். 

இது தான் சமூக நீதி. மக்களும், மந்திரியும் ஒன்றி இருக்க வேண்டும் என்று தமிழக பா.ஜனதா கட்சி நினைக்கிறது. மத்திய மந்திரியை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம்.

ராணுவ தளவாட மையம்

தமிழகம் மட்டுமின்றி 22 மாநிலங்களில் நடைபெறும் யாத்திரையில் புதிய மத்திய மந்திரிகள் 43 மந்திரிகள் பங்கேற்கிறார்கள். தி.மு.க. அரசு 100 நாட்கள் ஆட்சியை நிறைவு செய்கிறார்கள். 

அதிகாரிகள் நன்றாக பணியாற்றுகிறார்கள். கொரோனா 2-வது அலையை மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து கட்டுப்படுத்தி உள்ளனர்.

ராணுவ தளவாட மையம் மூலம் ரூ.2 ஆயிரம் கோடி முதலீடு வந்துள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இப்படி இணக்கமாக இருந்தால் முழு பயனும் கிடைக்கும். நாங்கள் தி.மு.க.வுக்கு எதிரி கட்சி அல்ல. எதிர்க்கட்சி தான்.

வரவேற்கிறோம்

தமிழக அரசு பெட்ரோல் விலையை குறைத்தது மக்களுக்கு நல்லது நடக்கும் என்பது மாற்றுக்கருத்து இல்லை. பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி.க்கு கீழ் கொண்டுவர கவுன்சில் ஒத்துழைப்பு வேண்டும். மேலும் மாநில அரசுதான் முன்னெடுக்க வேண்டும்.

நாடாளுமன்றத்தில் தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை எம்.பி. க்கள் பேசவில்லை. எதிர்க்கட்சியினர் திட்டம் போட்டு நாடாளு  மன்றத்தில் அமளி செய்தனர். 

அனைத்து சாதியினரும் அர்ச்சகராக லாம் என்ற சட்டத்தை வரவேற்கிறோம். ஆனால் ஆகம விதிப்படி நடைபெற வேண்டும்.

உள்ளாட்சி தேர்தலுக்கு தயார்

அரசியல் காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையில் தான் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் சோதனை நடைபெற்று உள்ளது. 

எனவே விசாரணைக்கான முடிவு வந்த பின்னர் அது குறித்து பேசலாம்.
உள்ளாட்சி தேர்தலுக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். 

பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்டதால் தான் ராகுல்காந்தியின் டிவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story