காந்திபுரத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு
காந்திபுரத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு
கோவை
கொரோனா 3-வது அலை பரவலை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை கோவை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது.
இந்தநிலையில் கோவை காந்திபுரம் டவுன் பஸ்நிலையத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படுகிறதா? என்று மாவட்ட கலெக்டர் சமீரன் நேற்று திடீரென்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, அவர் அங்கு நின்ற அரசு பஸ்சில் ஏறி பயணிகளிடம் முகக்கவசம் அணியவும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்கவும், கைகளை அடிக்கடி கழுவவும் அறிவுறுத்தினார்.
மேலும் அவர், முகக்கவசம் அணியாத பயணிகளை பஸ்சுக்குள் ஏற அனுமதிக்க வேண்டாம் என்று கண்டக்டர்கள் மற்றும் டிரைவர்களிடம் அறிவுறுத்தினார்.
இதற்கிடையே பஸ்நிலையத்தில் கொரோனா விதிகளை முறையாக பின்பற்றாத 2 பஸ்களுக்கு அபராதம் விதிக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story