800 பேருக்கு கொரோனா தடுப்பூசி
800 பேருக்கு கொரோனா தடுப்பூசி
கணபதி
கொரோனா பரவலை தடுக்க கோவை மாநகராட்சி சார்பில் பொது மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
எந்தெந்த பகுதிகளில் தடுப்பூசி செலுத்தப்படும் என்று காலை 7 அல்லது 8 மணிக்கு மாநகராட்சி அறிவிக்கிறது. ஆனாலும் தடுப்பூசி மையங்கள் மக்கள் கூட்டம் கூடுவது வழக்கமாகி வருகிறது.
கணபதி, மணியகாரம் பாளையம் பகுதிகளில் நேற்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. பொதுமக்கள் நீண்டவரிசையில் நின்று தடுப்பூசி செலுத்திக் கொண்ட னர். அந்த 2 மையங்களில் மொத்தம் 800 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இதனால் 60 வயதுக்கும் மேற்பட்ட முதியவர்கள் வரிசையில் நிற்க முடியாமல் மிகவும் அவதிப்பட்டனர். எனவே முதியவர்களுக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி செலுத்த மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story