பழனியில் விபசாரம் நடத்திய தனியார் மடத்துக்கு சீல்


பழனியில் விபசாரம் நடத்திய தனியார் மடத்துக்கு சீல்
x
தினத்தந்தி 14 Aug 2021 9:40 PM IST (Updated: 14 Aug 2021 9:40 PM IST)
t-max-icont-min-icon

பழனியில் விபசாரம் நடத்தியதாக தனியார் மடத்திற்கு வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர்.

பழனி:
பழனி பஸ் நிலையம் அருகே அடிவாரம் சாலையில் உள்ள தனியாருக்கு சொந்தமான மடத்தில் விபசாரம் நடப்பதாக புகார் எழுந்தது. இதனையடுத்து மீண்டும் விபசாரம் நடந்தால் பூட்டி பூட்டி 'சீல்' வைக்கப்படும் என்று மடத்தின் நிர்வாகத்துக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். ஆனாலும் அந்த மடத்தில் விபசாரம் போன்ற குற்றச்செயல்கள் தொடர்ந்து நடந்து வந்ததாக கூறப்படுகிறது. 
இதையடுத்து பழனி டவுன் போலீசார் சம்பந்தப்பட்ட மடத்தை 'சீல்' வைக்க தாசில்தாருக்கு பரிந்துரை செய்தனர். அதன்பேரில் தாசில்தார் சசி, அந்த மடத்தை பூட்டி ‘சீல்' வைக்க உத்தரவிட்டார். 
இதையடுத்து துணை தாசில்தார் ஜெகதீசன், கிராம நிர்வாக அலுவலர் ராமசந்திரன் மற்றும் போலீசார் நேற்று சம்பவ இடத்துக்கு சென்று மடத்தின் கதவை பூட்டி 'சீல்' வைத்தனர்.

Next Story