புதுச்சேரியில் இருந்து பண்ருட்டிக்கு ஆம்புலன்சில் மதுபாட்டில்கள் கடத்தல்


புதுச்சேரியில் இருந்து பண்ருட்டிக்கு ஆம்புலன்சில் மதுபாட்டில்கள் கடத்தல்
x
தினத்தந்தி 14 Aug 2021 10:10 PM IST (Updated: 14 Aug 2021 10:10 PM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் இருந்து பண்ருட்டிக்கு ஆம்புலன்சில் மதுபாட்டில்களை கடத்திய டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

கடலூர், 

கடலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் பத்மா, சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பராஜ் ஆகியோர் தலைமையிலான போலீசார் நேற்று மதியம் கடலூர் சாவடியில் உள்ள சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த தனியார் ஆம்புலன்சை மறித்து, டிரைவரிடம் விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதில் சந்தேகமடைந்த போலீசார் ஆம்புலன்சில் சோதனை செய்தனர். அப்போது அந்த ஆம்புலன்சில் 20 மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.3 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.

பறிமுதல்

இதையடுத்து டிரைவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பண்ருட்டியை சேர்ந்த சதிஷ் (வயது 27) என்பதும், புதுச்சேரி மாநில எல்லையில் இருந்து மதுபாட்டில்களை குறைந்த விலைக்கு வாங்கி, சாவடி வழியாக பண்ருட்டிக்கு கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து சதிசை கைது செய்த போலீசார் மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

Next Story