அரசியல் காழ்ப்புணர்ச்சியால் போட்ட வழக்கை நீதிமன்றத்தில் சந்திப்போம்


அரசியல் காழ்ப்புணர்ச்சியால் போட்ட வழக்கை நீதிமன்றத்தில் சந்திப்போம்
x
தினத்தந்தி 14 Aug 2021 10:45 PM IST (Updated: 14 Aug 2021 10:45 PM IST)
t-max-icont-min-icon

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் போட்ட வழக்கை நீதிமன்றத்தில் சந்திப்போம்

கோவை

லஞ்ச ஒழிப்பு போலீஸ் மூலம் சோதனை நடத்தி அரசியல் காழ்ப்புணர்ச்சியால் போடப்பட்ட வழக்கை நீதிமன்றத்தில் சந்திப்போம் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.

எஸ்.பி.வேலுமணிக்கு வரவேற்பு

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். அவருக்கு கோவை விமான நிலை யத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 

முன்னதாக அவர், விமான நிலையத்தில் இருந்து சிறிது தூரம் திறந்த ஜீப்பில் ஊர்வலமாக வந்தார்.

இதில், எம்.எல்.ஏ.க்கள், அ.தி.மு.க. பிரமுகர்கள், தொண்டர்கள் உள்பட திரளாக கலந்து கொண்டனர். 

இதையடுத்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது

அரசியல் காழ்ப்புணர்ச்சி

தி.மு.க. அரசால் அரசியல் காழ்ப்புணர்சி காரணமாக என் மேல் பொய் வழக்கு போடப்பட்டு, என் வீடு, உறவினர்கள் வீடு மற்றும் சம்பந்தம் இல்லாத இடங்களிலும் காவல் துறையினரை ஏவிவிட்டு சோதனை செய்தனர்.

 குறிப்பாக அந்த நேரத்தில் எனக்கு உறுதுணை யாக இருந்த எங்களது தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கட்சியினருக்கு நன்றி.

கோவையில் 10 சட்டமன்ற தொகுதிகளையும் அ தி.மு.க கைப்பற்றி யது. நான் அமைச்சரான பிறகு கோவைக்கு 50 ஆண்டுகாலம் இல்லாத வளர்ச்சியை தந்தததால், மக்கள் இந்த அளவிற்கு ஆதரவு அளித்தனர். 

எனவே அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பழிவாங்கும் நோக்கத்துடன் சோதனை நடத்தி உள்ளார்கள். அதை நாங்கள் சட்ட ரீதியாக நீதிமன்றத்தில் சந்திப்போம். 

தவறான தகவல்

இந்த வழக்கிற்குள் செல்ல விரும்பவில்லை. வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. சோதனையின்போது ரூ.13 லட்சம் கண்டுபிடித்தாக கூறுகின்ற னர். அந்த பணம் என் வீட்டிலோ, உறவினர் வீட்டிலோ எடுக்கப்பட வில்லை. அது தவறான தகவல்.

அதேபோல் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டதாக வெளியிடப்பட்டது. அதுவும் தவறு. நான் அனைத்து மதத்தையும் மதிப்பவன். கடவுளை நம்புகிறவன், 30 ஆண்டுகளாக சபரிமலைக்கு செல்பவன். 

நீதியரசர் களை நம்புகிறோம். அரசியல் காழ்ப்புணர்ச்சியால் போடப்பட்ட வழக்கை நீதிமன்றத்தில் சந்திப்போம். கோவை மாவட்ட மக்களுக்கு எந்த சூழ்நிலை வந்தாலும் உறுதுணையாக இருப்போம்.

யாரும் செய்யாத சாதனை

உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த போது யாரும் செய்ய முடியாத சாதனைகளை செய்து 148 விருதுகளை பெற்றுத் தந்தேன்.  நான் இருந்த காலகட்டத்தில் தான் கிராம சாலைகள் அதிகம் போடப்பட்டது. 

அதிகமான வீடுகளை ஏழைகளுக்கு கட்டிக் கொடுத்து உள்ளோம். கூட்டுக் குடிநீர் திட்டங்களை அதிக அளவில் செயல்படுத்தி உள்ளோம். 

நாங்கள் செய்த சாதனைகள் எந்த காலத்திற்கும் சொல்லும் அளவிற்கு அதிகமான திட்டங்களை எங்களுடைய துறை மூலம் தந்துள்ளோம். அதனால்தான் கோவை மாவட்ட மக்கள் எங்களுக்கு அந்த அளவிற்கு வெற்றியை தந்துள்ளார்கள் 

குறிப்பாக ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அ.தி.மு.க. ஆட்சி தொடர நான் முக்கிய காரணமாக இருந்ததால் தான் தி.மு.க. மற்றும் தி.மு.க. தலைவருக்கு என் மீது கோபம்.

இவ்வாறு அவர் கூறினார். 


Next Story