பணம் பறித்த 5 பேர் கைது
பணம் பறித்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
காளையார்கோவில்,
காரனேந்தல் கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் மாரி (வயது25). இவர் நண்பருடன் மோட்டார் சைக்கிளில் காளையார்கோவில் அருகே உள்ள செவல்புஞ்சை கிராமத்தின் அருகே வந்து கொண்டிருந்தபோது காளையார்கோவில் கிருஷ்ணா நகரைச் சேர்ந்த மாரி மகன் கிருஷ்ணமூர்த்தி (20), சிலையாஊரணி கிராமத்தைச் சேர்ந்த ஆசைத்தம்பி மகன் அஜித்குமார் (23), செல்லையா மகன் பிரசாந்த் (21) உள்பட 5 பேர் கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறித்து அதில் இருந்து ரூ, 8500-ஐ இவர்களது வங்கி கணக்கிற்கு பணபரி மாற்றம் செய்துள்ளனர்.
இது குறித்த புகாரின் பேரில் காளையார்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story