வேளாண்மைக்கு தனி பட்ஜெட் அறிவித்து அரசு சாதனை படைத்துள்ளது
தமிழக வரலாற்றில் வேளாண்மைக்கு தனி பட்ஜெட் அறிவித்து அரசு சாதனை படைத்துள்ளது என நெல் திருவிழாவில் திருவாரூர் போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் கூறினார்.
திருவாரூர்:
தமிழக வரலாற்றில் வேளாண்மைக்கு தனி பட்ஜெட் அறிவித்து அரசு சாதனை படைத்துள்ளது என நெல் திருவிழாவில் திருவாரூர் போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் கூறினார்.
நெல் திருவிழா
திருவாரூரில் நமது நெல்லைக்காப்போம் அமைப்பின் சார்பில் தேசிய நெல் திருவிழா நடந்தது. விழாவிற்கு அமைப்பின் தலைவர் துரைசிங்கம் தலைமை தாங்கினார். வேளாண்மை இணை இயக்குனர் சிவக்குமார், நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் விஸ்வந்கண்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் கலந்துகொண்டு முன்னோடி இயற்கை விவசாயிகள் படத்தை திறந்து வைத்தார். உணவு திருவிழாவை வேலுடையார் கல்வி நிறுவன தலைவர் தியாகபாரி தொடங்கி வைத்தார். இதில் வேளாண்மை உதவி பேராசிரியர் செல்வம் உள்பட கலந்து கொண்டார்.
இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
சாதனை படைத்துள்ளது
தமிழக வரலாற்றில் வேளாண்மைக்கு தனி பட்ஜெட் அறிவித்து அரசு சாதனை படைத்துள்ளது. ஒரு மனிதனுக்கு உணவு, உடை, இருப்பிடம் அவசியம். இதில் உணவு இல்லையென்றால் நம்மால் உயிர் வாழ முடியாது. அதனால் தான் உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர் என திருவள்ளுவர் கூறியுள்ளார். உணவு உற்பத்தி செய்யும் விவசாயிகள் இல்லையென்றால் மனித சமுதாயம் இல்லாத சூழ்நிலை ஏற்படும். உணவு உற்பத்தி விவசாயம் என்பது தொண்டாற்றுகின்ற பணியாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வரதராஜன் வரவேற்றார். முடிவில் கிரிதரன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story