பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி
கொரடாச்சேரி ஒன்றியத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.
கொரடாச்சேரி:
கொரடாச்சேரி ஒன்றியத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.
கணக்கெடுப்பு பணி
கொரடாச்சேரி ஒன்றியத்தில் பள்ளிக்கல்வித்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, சைல்டு லைன் ஆகியவை இணைந்து பள்ளி செல்லா இடைநின்ற மற்றும் மாற்றுத்திறன் குழந்தைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. வெண்ணவாசல், திருவிடைவாசல், அத்திக்கடை ஆகிய குடியிருப்பு பகுதிகளில் 6 முதல் 19 வயது வரை உள்ள பள்ளிசெல்லா இடைநின்ற மற்றும் மாற்றுத்திறன் குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.
ஆய்வு
இந்த பணிகளை ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின் மாவட்ட உதவித்திட்ட அலுவலர் பாலசுப்பிரமணியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பள்ளி செல்லா குழந்தைகள் கண்டறியப்பட்டு அவர்கள் அத்திக்கடை மற்றும் கொரடாச்சேரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சேர்க்கப்பட்டனர். இதில் களத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் வாசுகி சுப்பிரமணியன், மாவட்ட புள்ளியியல் அலுவலர் தண்டாயுதபாணி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்தன், மேற்பார்வையாளர் (பொறுப்பு) பிரபு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு புறத்தொடர்பாளர் சாந்தி, சைல்டு லைன் அணி உறுப்பினர் ஆனந்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story