தையல் எந்திரம் பெற விண்ணப்பிக்கலாம்


தையல் எந்திரம் பெற விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 14 Aug 2021 11:48 PM IST (Updated: 14 Aug 2021 11:48 PM IST)
t-max-icont-min-icon

தையல் எந்திரம் பெற விண்ணப்பிக்கலாம்

திருச்சி, ஆக.15-
திருச்சி மாவட்டத்தை சேர்ந்த கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுதிறனாளிகள், காதுகேளாத, வாய்பேச இயலாத மற்றும் மிதமான மனவளர்ச்சி குன்றியோர் மற்றும் 75 சதவீதத்துக்கும் மேல் பாதிக்கப்பட்ட மனவளர்ச்சி குன்றியோருடைய தாய்மார்களுக்கு விலையில்லா மோட்டார் பொருத்திய தையல் எந்திரம் பெற 18 வயது முதல் 45 வயது வரையுள்ள இருபாலரும் விண்ணப்பிக்கலாம். மேலும், மாற்றுத்திறனாளிகள் அரசு மற்றும் தனியார் தையல் பயிற்சி மையங்களில் தையல் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். இதுநாள்வரை அரசு துறைகளில் தையல் எந்திரம் பெறாதவராகவும் இருக்க வேண்டும். மேற்காணும் தகுதியுடைய 75 சதவீதத்துக்கும் மேல் பாதிக்கப்பட்ட மனவளர்ச்சி குன்றிய நபரின் தாய்மார்களும் விண்ணப்பிக்கலாம். எனவே தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் தங்களது மாற்றுதிறனாளி அடையாள அட்டை நகல், ரேஷன்கார்டுநகல், தையல் பயிற்சி பெற்றதற்கான சான்று, கல்வி மாற்றுச்சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட கோர்ட்டு பின்புறம், கண்டோன்மெண்ட் திருச்சி-1 என்ற முகவரியில் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ வருகிற 31-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு தொிவித்துள்ளார்.

Next Story