விதிமீறி செயல்பட்ட 3 கடைகளுக்கு அபராதம்


விதிமீறி செயல்பட்ட 3 கடைகளுக்கு அபராதம்
x
தினத்தந்தி 14 Aug 2021 11:52 PM IST (Updated: 14 Aug 2021 11:52 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாநகரில் விதிமீறி செயல்பட்ட 3 கடைகளுக்கு அபராதம் விதித்து வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை

திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மளிகை, காய்கறி, இறைச்சி கடைகளை தவிர ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள் உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்களை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மக்கள் அதிகம் வந்து செல்லும் பகுதியாக 33 பகுதிகள் அடையாளம் காணப்பட்டு அந்த பகுதிகளில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மளிகை, காய்கறி, இறைச்சி கடைகள், உணவுப்பொருட்களை விற்பனை செய்யும் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ், சிறிய தேநீர் கடைகள், மீன் கடைகளை தவிர மற்ற கடைகளை திறக்க தடை விதிக்கப்பட்டது.
அதன்படி நேற்று திருப்பூர் மாநகரில் வணிக பகுதிகளாக அடையாளம் காணப்பட்ட 33 பகுதிகளில் வர்த்தக நிறுவனங்கள், ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள், செல்போன் கடைகள் உள்ளிட்டவை அடைக்கப்பட்டன. அதுபோல் தேநீர் கடைகள், ஓட்டல்களில் பார்சல் சேவை அனுமதிக்கப்பட்டன. திருப்பூர் காதர்பேட்டையில் உள்ள பனியன் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. விதிமீறி திறக்கப்பட்ட கடைகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
அதன்படி திருப்பூர் குமரன் ரோடு, கோர்ட்டு வீதியில் விதிமீறி செயல்பட்ட 3 கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் என ரூ.15 ஆயிரம் வருவாய்த்துறை அதிகாரிகளால் அபராதமாக விதிக்கப்பட்டது. மேலும் சில கடைகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கடைகளை திறக்கக்கூடாது என்று அறிவுறுத்தினார்கள்.

Next Story