களக்காடு பகுதியில் மஞ்சள் காமாலை நோயால் 40 பேர் பாதிப்பு; சுகாதார பணிகள் தீவிரம்
களக்காடு பகுதியில் மஞ்சள் காமாலை நோயால் 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
களக்காடு:
களக்காடு பகுதியில் சுகாதாரமற்ற குடிநீரால் ஏராளமானவர்கள் மஞ்சள் காமாலைநோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். களக்காடு பெரிய தெரு, ஞானசம்பந்தபுரம், சரோஜினிபுரம், கிருஷ்ணன் கோவில் தெரு, தோப்பு தெரு, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நகர், சிதம்பரபுரம், தம்பிதோப்பு, எஸ்.என்.பள்ளிவாசல், படலையார்குளம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 40 பேர் மஞ்சள்காமாலை நோயால் பாதிக்கப்பட்டனர். இவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையடுத்து களக்காடு நகர பஞ்சாயத்து நிர்வாக அலுவலர் சுஷ்மா, சுகாதார ஆய்வாளர் ஆறுமுகநயினார், சுகாதார மேற்பார்வையாளர்கள் சண்முகம், வேலு உள்ளிட்ட குழுவினர், மஞ்சள்காமாலை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில் உள்ள தண்ணீரை ஆய்வு செய்தனர். அப்பகுதியில் உள்ள குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்தனர். குடிநீரில் குளோரின் அளவு சரியாக உள்ளதா? என்பதையும் ஆய்வு மேற்கொண்டனர்.
Related Tags :
Next Story