நெல்லையில் இருந்து தென்காசிக்கு உள்ளாட்சி தேர்தலுக்கான ஆவணங்கள் அனுப்பி வைப்பு
நெல்லையில் இருந்து தென்காசிக்கு உள்ளாட்சி தேர்தலுக்கான ஆவணங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
நெல்லை:
தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற செப்டம்பர் மாதம் நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. நெல்லை, தென்காசி மாவட்டங்களிலும் இந்த தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 425 பஞ்சாயத்துகள் இருந்தன. அந்த பஞ்சாயத்துகளில் தேர்தல் நடத்துவதற்கான ஆவணங்கள் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் தற்போது தென்காசி மாவட்டம் பிரிக்கப்பட்டு விட்டதால், அந்த மாவட்டத்துக்கு தேவையான தேர்தல் வாக்குச்சாவடி ஆவணங்களை பிரித்து அனுப்பும் பணி நேற்று நடைபெற்றது. ஆவணங்களை பிரித்து ஒரு லாரியில் ஏற்றி தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று இரவு அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story