அறந்தாங்கி முதியவரை கன்னத்தில் அறைந்த போலீஸ்காரர் பணியிடை நீக்கம்


அறந்தாங்கி முதியவரை கன்னத்தில் அறைந்த போலீஸ்காரர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 14 Aug 2021 7:23 PM GMT (Updated: 14 Aug 2021 7:23 PM GMT)

முதியவரை கன்னத்தில் அறைந்த போலீஸ்காரர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

அறந்தாங்கி:
அறந்தாங்கி அருகே ரெத்தினக்கோட்டையை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது உறவினர் ராதாகிருஷ்ணன்(வயது 69). இவர்கள் இருவருக்கும் வீட்டிற்கு அருகே குப்பை கொட்டுவதில் பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து அறந்தாங்கி போலீசில் ஆறுமுகம் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் அறந்தாங்கி போலீஸ் ஏட்டு முருகன், போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது அவர் ராதாகிருஷ்ணனை திட்டி கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்தீபனிடம் புகார் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் போலீஸ் ஏட்டு முருகன் திருச்சி மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்து டி.ஐ.ஜி. ராதிகா உத்தரவிட்டார். மேலும் துறை ரீதீயான விசாரணையும் நடைபெற்றது. இந்நிலையில், ஏட்டு முருகனை பணியிடை நீக்கம் செய்து உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். ராதாகிருஷ்ணனை, போலீஸ் ஏட்டு கன்னத்தில் அறைந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Next Story