பாளையங்கோட்டை சிறையில் கைதி திடீர் சாவு
பாளையங்கோட்டை சிறையில் கைதி திடீரென இறந்தார்.
நெல்லை:
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே உள்ள அழகிய பாண்டியபுரம் ஞானியார்புரத்தை சேர்ந்தவர் தேவதாஸ் (வயது 56). இவரை பூதப்பாண்டி போலீசார் கஞ்சா வழக்கில் கைது செய்து கடந்த 7-ந் தேதி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை அவருக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக சிறைக்காவலர்கள் அவரை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே தேவதாஸ் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டது. இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story