தனியார் பஸ் மோதி தொழிலாளி பலி
தனியார் பஸ் மோதி தொழிலாளி பலியானார்.
கரூர்
கடவூர் வெள்ளாளப்பட்டி அருகே உள்ள சின்ன தேவன் பட்டியை சேர்ந்தவர் மோகன் குமார் (வயது 40), மில் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு பசுபதிபாளையம் பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த தனியார் பஸ் ஒன்று மோகன் குமார் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த மோகன்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த பசுபதிபாளையம் இன்ஸ்பெக்டர் ரமாதேவி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story