விவசாயி விஷம் குடித்து தற்கொலை


விவசாயி விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 15 Aug 2021 1:31 AM IST (Updated: 15 Aug 2021 1:31 AM IST)
t-max-icont-min-icon

சுரண்டை அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

சுரண்டை:
சுரண்டை அருகே இடையர்தவணை கிராமம் ஈஸ்வரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் (51) விவசாயி. இவருக்கு வசந்தா என்ற மனைவியும் 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். சம்பவத்தன்று இரவு முருகன் மதுவில் விஷம் கலந்து குடித்துவிட்டு கட்டிலில் படுத்து தூங்கியுள்ளார். இடையில் திடீரென எழுந்த அவரது குடும்பத்தினர் மருந்து வாசனை வந்ததும் அவரை எழுப்பி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்சில் வந்த மருத்துவ பணியாளர்கள் அவரை பரிசோதித்து விட்டு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் சுரண்டை போலீசார் வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story