ஜெயங்கொண்டம், தா.பழூர் பகுதிகளில் மழை


ஜெயங்கொண்டம், தா.பழூர் பகுதிகளில் மழை
x
தினத்தந்தி 15 Aug 2021 2:10 AM IST (Updated: 15 Aug 2021 2:10 AM IST)
t-max-icont-min-icon

ஜெயங்கொண்டம், தா.பழூர் பகுதிகளில் மழை பெய்தது.

ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் நேற்று காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. மாலையில் வெயிலின் தாக்கம் லேசாக குறைந்தது. பின்னர் திடீரென லேசான இடி, மின்னல், காற்றுடன் கூடிய மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் தூறலாக இந்த மழை காரணமாக வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மற்றும் கடலை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதேபோல் தா.பழூர் பகுதியில் நேற்று மாலை 4 மணி அளவில் குளிர்ந்த காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. இடியுடன் சுமார் மூன்று மணி நேரம் தொடர்ந்து மழை பெய்தது. ஆடி பட்டம் நெல் விதைப்புக்கு தயாராகி வரும் விவசாயிகள் இந்த மழையால் மகிழ்ச்சி அடைந்தனர். குறுவை அறுவடை முடிந்து நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்மணிகளோடு காத்திருக்கும் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Related Tags :
Next Story