மகாமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
மகாமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே இலங்கைச்சேரி கிராமத்தில் உள்ள மகா மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி முன்னதாக 3 நாட்கள் சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டு, நான்கு கால பூஜை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட கும்பக்கலசத்தினை கோவில் குருக்கள் உமாபதி, கணேசன் ஆகியோர் சுமந்து கோவிலை சுற்றி வந்து, கோவில் கோபுர கலசத்தின் மீது புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். பின்னர் அம்மன் சிலை மீது புனிதநீர் ஊற்றப்பட்டு குருக்கள் சிவாச்சாரியார் சுப்பிரமணியன் வேதமந்திரங்கள் முழங்க, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். விழாவில் ஊர் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள், இளைஞர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story