தமிழக அணி வீரர்களுக்கு பொள்ளாச்சியில் வரவேற்பு
ஜம்மு காஷ்மீரில் நடந்த தேசிய அளவிலான கபடி போட்டியில் வெற்றி பெற்ற தமிழக அணி வீரர்களுக்கு பொள்ளாச்சியில் வரவேற்பு அளிக்கப் பட்டது.
பொள்ளாச்சி
ஜம்மு காஷ்மீரில் நடந்த தேசிய அளவிலான கபடி போட்டியில் வெற்றி பெற்ற தமிழக அணி வீரர்களுக்கு பொள்ளாச்சியில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
கபடி போட்டி
ஜம்மு காஷ்மீரில் தேசிய அளவிலான கபடி போட்டிகள் கடந்த 8 மற்றும் 9-ந்தேதிகளில் நடைபெற்றது. இதில் 17 வயதிற்கு உட்பட்டோருக்கான போட்டியில் மணிப்பூர், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், பஞ்சாப், தமிழ்நாடு, சண்டிகர், அரியானா, குஜராத், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த அணிகள் கலந்துகொண்டு விளையாடின.
17 வயதிற்கு உட்பட்டோருக்கான போட்டிகள் நாக்-அவுட் முறையில் நடத்தப்பட்டன. ஏ, பி என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்றன. இந்த நிலையில் இறுதி போட்டியில் தமிழ்நாடு, அரியானா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பரபரப்பான இந்த போட்டியில் 28-க்கு 21 என்ற புள்ளி கணக்கில் தமிழக அணி வெற்றி பெற்றது.
உற்சாக வரவேற்பு
இதை தொடர்ந்து தமிழக அணிக்கு கோப்பை மற்றும் வீரர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன.
இந்த அணியில் பொள்ளாச்சி அருகே உள்ள சேத்துமடையை சேர்ந்த 9 பேர் இடம்பெற்று விளையாடினர். மேலும் புதுக்கோட்டை, மதுரையை சேர்ந்த வீரர்களும் இடம்பெற்றிருந்தனர். போட்டியில் வெற்றி பெற்று தமிழகம் திரும்பிய அணியினர் பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
சப்-கலெக்டர் அலுவலகத்தில் சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராவை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது பயிற்சியாளர் விக்னேஷ் உடன் இருந்தார்.
இதை தொடர்ந்து சேத்துமடைக்கு செல்லும் வழியில் ஆனைமலை முக்கோணத்தில் கபடி வீரர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
Related Tags :
Next Story