நீலகிரி மாவட்டம் முதுமலை அருகே புலிகள் எண்ணிக்கை அதிகரிப்பு
நீலகிரி மாவட்டம் முதுமலை அருகே புலிகள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
கூடலூர்,
நீலகிரி மாவட்டம் முதுமலை அருகே கர்நாடக மாநிலத்தின் பந்திப்பூர் சரணாலயம் உள்ளது. இங்கு பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் அந்த சரணாலயத்தில் வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது 3 புலிகள் கூட்டமாகவும், ஒரு புலி தனியாகவும் நடந்து செல்வதை கண்டனர்.
இதை வீடியோ எடுத்து வெளியிட்டனர். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, பந்திப்பூர் வனப்பகுதியில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இதனால் அவற்றின் நடமாட்டம் பரவலாக உள்ளதை காண முடிகிறது என்றனர்.
Related Tags :
Next Story