ஊட்டியில் போலீசார் அணிவகுப்பு ஒத்திகை
ஊட்டியில் போலீசார் அணிவகுப்பு ஒத்திகை
ஊட்டி
நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் 75-வது சுதந்திர தின விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு ஊட்டி அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது. கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்துகிறார். பின்னர் சிறப்பாக பணிபுரிந்த அரசு பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்குகிறார். கொரோனா பாதிப்பு காரணமாக எளிமையாக சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி நேற்று கல்லூரி விளையாட்டு மைதானத்தில் போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை நடந்தது. இதனை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் ஆகியோர் பார்வையிட்டு, அங்கு மேற்கொள்ளப்பட்டு உள்ள முன்னேற்பாடுகளை ஆய்வு செய்தனர். மழை பெய்து வருவதால் மைதானத்தில் மணல் கொட்டி சமன்படுத்தும்படி கலெக்டர் அறிவுறுத்தினார். விழாவையொட்டி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story