தமிழகத்தில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3 விலை குறைப்பு: ‘மோடி செய்யாததை மு.க.ஸ்டாலின் செய்து உள்ளார்’ கே.எஸ்.அழகிரி பேட்டி
தமிழகத்தில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3 விலை குறைப்பு: ‘மோடி செய்யாததை மு.க.ஸ்டாலின் செய்து உள்ளார்’ கே.எஸ்.அழகிரி பேட்டி.
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு டெல்லியில் இருந்து வந்த தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-
இஸ்ரேல் நாட்டின் ‘பெகாசஸ்’ மென்பொருளை பயன்படுத்தி நம் நாட்டில் 300 பேரின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டு கேட்டு இருப்பது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது. இது தொடர்பாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெளிவான விளக்கத்தை தரவில்லை. பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் நாடாளுமன்றத்தில் உரிய அறிக்கை சமர்ப்பித்து இருந்தால் பிரச்சினை வந்து இருக்காது. எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை நடத்த கூடாது என்று சொல்லவில்லை. விவாதிக்க வேண்டும் என்றனர். நாடாளுமன்றத்தில் 2 மணி நேரம் விவாதிக்க தயாராக இல்லாமல் சபையை ஒத்தி வைத்தது மோடி அரசு தான். நாடாளுமன்றத்தை முடக்கியது மத்திய மோடி அரசு தான். எதிர்க்கட்சிகள் முடக்கவில்லை.
தமிழகத்தில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3 விலை குறைக்கப்பட்டு உள்ளது. மோடியால் செய்ய முடியாததை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்து இருக்கிறார். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொன்னதை செய்து இருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story