கும்மிடிப்பூண்டி அருகே பஸ்சில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது


கும்மிடிப்பூண்டி அருகே பஸ்சில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது
x
தினத்தந்தி 15 Aug 2021 12:42 PM IST (Updated: 15 Aug 2021 12:42 PM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டி அருகே பஸ்சில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது.

கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள நவீன ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியில் நேற்று கவரைப்பேட்டை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த தமிழக அரசு பஸ்சில் போலீசார் சோதனை நடத்தினர். அதில் சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த ஒரு பையை அவர்கள் சோதனை செய்த போது அதில் 5 பாக்கெட்களில் மொத்தம் 10 கிலோ எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது.

இது தொடர்பாக கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பஸ்சில் பயணம் செய்த ஒடிசாவை சேர்ந்த கிரண்குமார் (வயது22) என்பவரை கைது செய்தனர்.

அதே போல ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கிசென்ற மற்றொரு அரசு பஸ்சில் பயணிகளின் உடமைகளுக்கு மத்தியில் கேட்பாரற்று கிடந்த 1 கிலோ எடை கொண்ட கஞ்சா பொட்டலங்களையும், 10 கிலோ எடை கொண்ட தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களையும் போலீசார் கைப்பற்றினர்.

Next Story