சாயர்புரத்தில் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை
சாயர்புரத்தில் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்
சாயர்புரம்:
சாயர்புரம் ஜோசப் தெருவை சேர்ந்த அந்தோணி சார்லஸ் செல்வம் (வயது36). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி செல்வரதி(35). இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாம் இதனால் மனமுடைந்த செல்வரதி வீட்டில் துப்பட்டாவில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். செல்வரதி தாயார் வள்ளி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சாயர்புரம் போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுசம்பந்தமாக சாயர்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மேரி ஜெமீந்தா வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார். இவருக்கு ஒரு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.
Related Tags :
Next Story