நகையை பறிக்க முயற்சி
குமரலிங்கம் பகுதியில் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த பெண்ணைக்கத்தியால் குத்தி வழிப்பறி செய்ய முயன்ற சிறுவனை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
போடிப்பட்டி
குமரலிங்கம் பகுதியில் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த பெண்ணைக்கத்தியால் குத்தி வழிப்பறி செய்ய முயன்ற சிறுவனை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
கத்திக்குத்து
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
குமரலிங்கத்தையடுத்த ருத்ராபாளையம் மதகடிபுதூரைச் சேர்ந்தவர் கிட்டுசாமி விவசாயி. இவருடைய மனைவி மயிலாத்தாள். .இவர் குமரலிங்கம் குள்ளக்கார் ஓடைக்கு அருகிலுள்ள தனது தோட்டத்தில் உள்ள தென்னை ஓலைகளை சேகரித்து சீமாறுக்குச்சி கிழித்துக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த 4 பேர் மயிலாத்தாளிடம் காது மற்றும் கழுத்தில் அணிந்துள்ள நகைகளை கழட்டித்தருமாறு மிரட்டியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த மயிலாத்தாள் அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்து கூச்சலிட்டுள்ளார்.உடனடியாக மயிலாத்தாளின் கையிலிருந்த கத்தியைப் பிடுங்கியவர்கள், சத்தம் போடாதே என்று கூறி அவருடைய கை மற்றும் தோள்பட்டையில் கத்தியால் குத்தியுள்ளனர்.
சிறுவன் கைது
மயிலாத்தாள் தொடர்ந்து சத்தம் போடவே அருகிலுள்ள தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த விவசாயிகள், மற்றும் தொழிலாளர்கள் ஓடி வந்தனர். இதனைப் பார்த்த 4 பேரும் அங்கிருந்து தப்பி ஓடினர். அவர்களை விவசாயிகள் விரட்டி சென்றனர். அதில் ஒரு ஆசாமி மட்டும் சிக்கினார். மற்ற 3 பேர் தப்பி ஓடி விட்டனர்.
இதையடுத்து பிடிபட்ட ஆசாமியை குமரலிங்கம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அந்த ஆசாமிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவன் கொழுமம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரிய வந்தது. இதையடுத்து சிறுவனை போலீசார் கைது செய்தனர். மேலும் அவனுடன் சேர்ந்து வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அதே பகுதியைச்சேர்ந்த சிவசெல்வன், சிவா மற்றும் பிரபாகரன் என்பது தெரிய வந்தது.
தலைமறைவாக உள்ள அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். மேலும் சம்பவம் குறித்து குமரலிங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கத்தியால் குத்தி பெண்ணிடம் வழிப்பறி செய்ய முயன்ற சிறுவர்களால் குமரலிங்கம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
----
Related Tags :
Next Story