மாணவி பலி


மாணவி பலி
x
தினத்தந்தி 15 Aug 2021 6:48 PM IST (Updated: 15 Aug 2021 6:48 PM IST)
t-max-icont-min-icon

காங்கேயம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

காங்கேயம்
காங்கேயம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பள்ளி மாணவி
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் தாலுகா நடுவனூரைச் சேர்ந்தவர் செல்வன் வயது 40. இவரது மனைவி செந்தாமரை37. இருவரும் காங்கேயம் அருகே படியூரில் உள்ள தேங்காய் களத்தில் தங்கி வேலை செய்து வருகின்றனர். இவர்களுடைய மூத்த மகள் வீரலட்சுமி 15. இவர் நடுவனூரில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்துவந்தார். 
கடந்த 6ந் தேதி செல்வம் தனது மோட்டார் சைக்கிளில் மகள் வீரலட்சுமியை படியூரில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் நடுவனூர் பள்ளிக்கு புத்தகம் வாங்க சென்றார்.  பின்னர் பள்ளியில் புத்தகம் வாங்கிக்கொண்டு மீண்டும் படியூருக்கு வந்தனர். மோட்டார் சைக்கிளை செல்வம் ஓட்டினார். பின் இருக்கையில் அவருடைய மகள் வீரலட்சுமி அமர்ந்து இருந்தார். அப்போது. செல்வம் மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டிவந்ததாக கூறப்படுகிறது. 
பலி
மோட்டார்சைக்கிள் காங்கேயம் அருகே வட்டமலை பஸ் நிறுத்த பகுதியில் வந்து கொண்டிருக்கும் போது வீரலட்சுமி மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் வீரலட்சுமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் வீரலட்சுமியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த வீரலட்சுமி நேற்று முன்தினம் இரவு 11.45 மணியளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து ஊதியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
==============

Next Story