திருவாரூரில் நடந்த சுதந்திர தின விழாவில் 204 பேருக்கு ரூ.1 கோடியே 92 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வழங்கினார்
திருவாரூரில் நடந்த சுதந்திர தின விழாவில் 204 பேருக்கு ரூ.1 கோடியே 92 லட்சத்து 61 ஆயிரத்து 863 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வழங்கினார்.
திருவாரூர்:-
திருவாரூரில் நடந்த சுதந்திர தின விழாவில் 204 பேருக்கு ரூ.1 கோடியே 92 லட்சத்து 61 ஆயிரத்து 863 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வழங்கினார்.
சுதந்திர தின விழா
திருவாரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நேற்று சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தேசியக்கொடியை ஏற்றி வைத்து, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார். பின்னர் உலக சமாதானத்தை வலியுறுத்தி வெண்புறாக்கள் பறக்க விடப்பட்டன. மேலும் சிறப்பாக பணி புரிந்தமைக்காக போலீஸ்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, சுகாதாரத்துறை, மருத்துவத்துறை மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறை உள்ளிட்ட துறைகளை சேர்ந்த 566 அரசு அலுவலர்களுக்கும் பாராட்டுச்சான்றிதழ்களை வழங்கினார்.
விழாவில் சமூக பாதுகாப்பு திட்டம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் தமிழக முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் 204 பேருக்கு ரூ.1 கோடியே 92 லட்சத்து 61 ஆயிரத்து 863 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
கலைநிகழ்ச்சிகள் ரத்து
கொரோனா பரவல் காரணமாக சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்களுக்கு அவரவர் வீட்டிலேயே அதிகாரிகள் பொன்னாடை அணிவித்து கவுரவித்தனர். மேலும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டதுவிழாவில் மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலசுப்பிரமணியன், மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தெய்வநாயகி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) புண்ணியகோட்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story