சாத்தான்குளம் அருகே தொழிலாளிக்கு கத்திக்குத்து


சாத்தான்குளம் அருகே தொழிலாளிக்கு கத்திக்குத்து
x
தினத்தந்தி 15 Aug 2021 8:12 PM IST (Updated: 15 Aug 2021 8:12 PM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளம் அருகே தொழிலாளியை கத்தியால் குத்திய தம்பியை போலீசார் தேடிவருகின்றனர்

சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே கீழஅம்பலச்சேரியைச் சேர்ந்தவர் கோயில்ராஜ் மகன் ராஜ்குமார் (வயது 41). கூலித் தொழிலாளியான இவரது தம்பி தாமஸ்ராஜ் (37). சம்பவத்தன்று இருவரும் மது அருந்தி வந்துள்ளனர். அப்போது தம்பி தாமஸ்ராஜ், அண்ணன் ராஜ்குமாரை பார்த்து மதுபோதையில் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.. இதனை அவர் தட்டி கேட்டதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாம். இதில் ஆத்திரமடைந்த தாமஸ்ராஜ் தான் மறைத்து வைத்திருந்த பென்சில் கத்தியால் அண்ணன் ராஜ்குமாரை குத்தியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த ராஜ்குமார் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து சாத்தான்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருள்சாம்ராஜ் வழக்குபதிவு செய்து தலைமறைவான தம்பியை தேடி வருகிறார்.


Next Story