சங்கிலிமுனியப்பன் கோவிலில் வழிபாடு நடத்த அனுமதி மறுப்பு வனத்துறையினரை கண்டித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்


சங்கிலிமுனியப்பன் கோவிலில் வழிபாடு நடத்த அனுமதி மறுப்பு  வனத்துறையினரை கண்டித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 15 Aug 2021 8:54 PM IST (Updated: 15 Aug 2021 8:54 PM IST)
t-max-icont-min-icon

சங்கிலிமுனியப்பன் கோவிலில் வழிபாடு நடத்த அனுமதி மறுத்ததால் வனத்துறையினரை கண்டித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளி அருகே பாளையம்புதூர் ஊராட்சி ஓபிலிராயன் வனப்பகுதியில் சங்கிலிமுனியப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பாளையம்புதூர் உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமமக்கள் ஆடு, கோழி பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்துவதற்க்காக நேற்று சென்றனர். அப்போது அங்கு வந்த வனத்துறையினர், வனப்பகுதியில் உள்ள சாமியை வழிபட அனுமதி மறுத்து கிராமமக்களை தடுத்து நிறுத்தினர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் கிராம மக்கள் வனத்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story