கிருஷ்ணகிரி, கெலமங்கலத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க அதிநவீன கேமராக்கள்-போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்
கிருஷ்ணகிரி, கெலமங்கலத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க அதிநவீன கேமராக்களின் செயல்பாட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி:
கண்காணிப்பு கேமராக்கள்
குற்ற சம்பவங்களை தடுக்கவும், போக்குவரத்து விதி மீறலை கண்காணிக்கவும் கிருஷ்ணகிரி ரவுண்டானா பகுதியில் கேமரா கண்காணிப்பு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜூ, துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தனியார் பங்களிப்புடன் அமைக்கப்பட்டுள்ள கேமரா கண்காணிப்பு அறையை போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி திறந்து வைத்து பார்வையிட்டார். அப்போது அவர் கூறுகையில், கிருஷ்ணகிரி நகரில் பெங்களூரு சாலை, சென்னை சாலை, சப்-ஜெயில், சேலம் சாலை உள்பட 18 இடங்களில் 66 அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் விபத்து மற்றும் குற்ற சம்பங்கள் உள்ளிட்டவை கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கபிலன், சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் சிவசந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கெலமங்கலம்
இதேபோல் கெலமங்கலம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தனியார் பங்களிப்புடன் ரூ.6 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பில் 54 கண்காணிப்பு கேமராக்கல் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றின் செயல்பாடுகளை போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி தொடங்கி வைத்து பார்வையிட்டார். மேலும் கெலமங்கலம் 4 ரோட்டில் அமைக்கப்பட்டுள்ள கேமராக்களின் கட்டுப்பாட்டு அறையையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜி, தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கிருத்திகா, கெலமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story