மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது
மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது
போடிப்பட்டி
கேரள மாநிலம் வயநாடு பகுதியைச் சேர்ந்த அச்சுதன் என்பவரது மகன் அனில்குமார் வயது 35. ரெயில்வே ஊழியராக பணியாற்றி வருகிறார்.இவர் மடத்துக்குளத்தை அடுத்த கணேசபுரம் ரெயில்வே காலனியில் தங்கியிருந்து பணிக்குச் செல்கிறார். இந்தநிலையில் சம்பவத்தன்று அனில்குமார் தனது நண்பர் முருகன் என்பவரிடமிருந்து மோட்டார் சைக்கிளை இரவலாக வாங்கிக்கொண்டு தனது வீட்டுக்கு வந்தார். மாலை 4 மணியளவில் ரெயில்வே காலனியிலுள்ள தனது வீட்டு வாசலில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு வீட்டுக்குள் சென்ற அனில் குமார் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை.
இதுகுறித்து மடத்துக்குளம் போலீஸ் நிலையத்தில் புகாரளித்தார். இதனையயடுத்து போலீசார் அந்த பகுதியிலுள்ள கண்காணிப்புக் கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.அதில் 25 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் மோட்டார்சைக்கிளை திருடிச் செல்வது பதிவாகியிருந்தது.அதனடிப்படையில் போலீசாரின் தீவிர விசாரணையில் மோட்டார் சைக்கிளை திருடிச் சென்ற நபர் குமரலிங்கம் பகுதியைச் சேர்ந்த பொன்னையன் என்பவரது மகன் பாலமுருகன் 27 என்பது தெரியவந்தது.இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story