குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது


குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது
x
தினத்தந்தி 15 Aug 2021 10:52 PM IST (Updated: 15 Aug 2021 10:52 PM IST)
t-max-icont-min-icon

குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் மாவட்டம் சின்னஆனையூர் பகுதியை சேர்ந்தவர் முருகையா மகன் சக்திமுருகன் (வயது21). இவரும் அதே பகுதியை சேர்ந்த அழகர்சாமி மகன் அழகுராஜா (24) என்பவரும் கடந்த ஜுன் மாதம் உழவுக்காக டிராக்டரில் சென்று கொண்டிருந்தபோது முன்பகை காரணமாக மேலகன்னிசேரியை சேர்ந்த சிலர் அரிவாள் மற்றும் கம்பால் தாக்கி படுகாயபடுத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக சக்திமுருகன் அளித்த புகாரின் அடிப்படையில் பேரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலகன்னிசேரியை சேர்ந்த வலம்புரி மகன் மீனாகுமார், வேலுசாமி மகன் தினேஷ்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இவர்கள் தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததோடு, சாதி ரீதியான மோதலில் ஈடுபட்டதால் இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் பரிந்துரை செய்தார். இதனை ஏற்று ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சந்திரகலா அதற்கான உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து 2 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story