வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் சுதந்திர தினத்தையொட்டி ரூ.8 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் சுதந்திர தினத்தையொட்டி ஒரேநாளில் ரூ.8 கோடியே 12 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனையானது என்று டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்
திருப்பத்தூர்
டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
75-வது இந்திய சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதனால் நேற்று முன்தினம் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
மாலை முதல் இரவு விற்பனை நேரம் முடியும் வரை ஏராளமான மதுபிரியர்கள் கடைகளின் முன்பு குவிந்தனர். அவர்கள் தங்களுக்கு விருப்பமான மதுபானங்களை வாங்கி உற்சாகத்துடன் சென்றனர். அதனால் வழக்கத்தை விட கூடுதலாக மது, பீர் வகைகள் விற்பனையாகின.
ரூ.8 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை
வேலூர் டாஸ்மாக் கோட்டம் வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் உள்ள 110 டாஸ்மாக் கடைகளில் வழக்கமாக விற்பனையாகும் மதுபானங்களை விட ரூ.2 கோடி மதுபானங்கள் கூடுதலாக விற்பனையானது. நேற்று முன்தினம் ஒரேநாளில் ரூ.4 கோடியே 95 லட்சம் மதுபானங்கள் விற்பனையாகின. வழக்கமாக மற்ற நாட்களில் ரூ.2¾ முதல் ரூ.3 கோடி வரை மதுபானங்கள் விற்பனையாகும்.
அதேபோன்று அரக்கோணம் டாஸ்மாக் கோட்டம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 88 டாஸ்மாக் கடைகளில் ரூ.3 கோடியே 17 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனையானது. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நேற்று முன்தினம் ஒரேநாளில் மொத்தம் ரூ.8 கோடியே 12 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனையானது என்று டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story