கன்றுக்குட்டியுடன் கிணற்றுக்குள் தவறி விழுந்த விவசாயி
கோவை அருகே கன்றுக்குட்டியுடன் கிணற்றுக்குள் தவறி விழுந்த விவசாயியை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
இடிகரை
கோவை அருகே கன்றுக்குட்டியுடன் கிணற்றுக்குள் தவறி விழுந்த விவசாயியை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
கால்நடைகள்
கோவைைய அடுத்த பெரியநாயக்கன்பாளையம் வீரபாண்டி அருகே உள்ள அறிவொளி நகரை சேர்ந்தவர் குருசாமி (வயது 65), விவசாயி. இவருக்கு சொந்தமான தோட்டம் அந்த பகுதியில் உள்ளது. மேலும் அவர் ஆடு, மாடுகளையும் வளர்த்து வருகிறார்.
இந்த நிலையில் குருசாமி தனது தோட்டத்துக்கு சென்று அங்கு ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்காக விட்டார். பின்னர் அவர் மாலையில் தோட்டத்துக்கு சென்று அந்த கால்நடைகளை கட்டி வைப்பதற்காக சென்றார்.
கிணற்றுக்குள் விழுந்தார்
அப்போது ஒரு கன்றுக்குட்டியை அவரால் பிடிக்க முடிய வில்லை. அது அங்குமிங்கும் ஓடியது. அப்போது அவர் அந்த கன்றுக்குட்டியை பிடிப்பதற்காக ஓடினார். அப்போது அங்கு இருந்த கிணற்றுக்குள் குருசாமி கன்றுக்குட்டியுடன் தவறி விழுந்தார்.
நீண்ட நேரம் ஆகியும் குருசாமி வீட்டிற்கு வராததால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் தோட்டத்துக்கு சென்று தேடினார்கள். அப்போது கிணற்றுக்குள் இருந்து காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என்று சத்தம் கேட்டது.
உயிருடன் மீட்பு
உடனே அவர்கள் அங்கு சென்று பார்த்தபோது அங்கு தண்ணீ ரில் குருசாமி கன்றுக்குட்டியுடன் தத்தளித்துக்கொண்டு இருந்தார். இது குறித்து தகவல் அறிந்த பெரியநாயக்கன்பாளையம் தீயணைப்பு நிலைய அதிகாரி ரகுநாதன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
பின்னர் அவர்கள், கிணற்றுக்குள் தத்தளித்த குருசாமி மற்றும் கன்றுக்குட்டியை கயிறு கட்டி உயிருடன் மீட்டனர். அவர்களை பொதுமக்கள் பாராட்டினார்கள்.
Related Tags :
Next Story