பத்திர எழுத்தர் வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் திருட்டு


பத்திர எழுத்தர் வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் திருட்டு
x
தினத்தந்தி 15 Aug 2021 11:44 PM IST (Updated: 15 Aug 2021 11:44 PM IST)
t-max-icont-min-icon

கரூர் அருகே பத்திர எழுத்தர் வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கரூர்
பத்திர எழுத்தர்
கரூர் அருகே உள்ள காந்திகிராமம் இந்திரா நகரை சேர்ந்தவர் சாமிவேல் (வயது 56). இவர் பத்திரங்களை எழுதும் எழுத்தராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் தனது வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றார். பின்னர் இரவு தனது வீட்டிற்கு வந்தார்.
அப்போது வீட்டின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சாமிவேல் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது அங்கு இருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன.
நகைகள் திருட்டு
மேலும், அலமாரியில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள்  மற்றும் வெள்ளி பொருட்களை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ.65 ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து சாமிவேல் அளித்த புகாரின் பேரில் தாந்தோணிமலை இன்ஸ்பெக்டர் மணிசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிந்து இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.
பத்திர எழுத்தர் வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story