திருவண்ணாமலையில் கலெக்டர் முருகேஷ் தேசிய கொடி ஏற்றினார்
திருவண்ணாமலையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கலெக்டர் முருகஷே் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
திருவண்ணாமலை
கலெக்டர் கொடியேற்றினார்
திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நேற்று 75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் கலெக்டர் முருகேஷ் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டியுடன் சென்று போலீசாரின் அணிவகுப்பை பார்வையிட்டு, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து சமாதானத்தை குறிக்கும் வகையில் வெண் புறாக்கள் மற்றும் பலூன்கள் பறக்கவிட்டார்.
பின்னர் வருவாய்த் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மகளிர் திட்டம், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத் துறை சார்பில் என மொத்தம் 11 பயனாளிகளுக்கு ரூ.18 லட்சத்து 18 ஆயிரம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
கேடயம், சான்றிதழ்
தொடர்ந்து பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், தன்னார்வ அமைப்புகள் மற்றும் தனித் திறமையாளர்கள் என 710பேருக்கு கேடயம் மற்றம் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன் குமார் ரெட்டி, மாவட்ட வருவாய் அலுவலர் முத்துகுமரசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட கூடுதல் கலெக்டர் பிரதாப், திருவண்ணாமலை உதவி கலெக்டர் வெற்றிவேல், உதவி கலெக்டர் (பயிற்சி) கட்டா ரவி தேஜா மற்றும் அரசு அலுவலர்கள், பணியாளர்கள், பயனாளிகள் கலந்துகொண்டனர்.
திருவண்ணாமலை நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் திருவண்ணாமலை கோட்ட பொறியாளர் முரளி தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
நிகழ்ச்சியில் உதவி கோட்ட பொறியாளர் ரகுராமன், உதவி பொறியாளர்கள் கலைமணி, தினேஷ் மற்றும் அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story