கட்டிட தொழிலாளி திடீர் சாவு


கட்டிட தொழிலாளி திடீர் சாவு
x
தினத்தந்தி 16 Aug 2021 12:58 AM IST (Updated: 16 Aug 2021 12:58 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகரில் கட்டிட தொழிலாளி திடீரென இறந்தார்.

விருதுநகர்,
குமரி மாவட்டம் கற்குடிவிளையை சேர்ந்தவர் டேவிட் (வயது 43). கட்டிட தொழிலாளியான இவர் கடந்த 13 நாட்களாக இந்நகர் பாத்திமா நகரில் உள்ள வீட்டில் தங்கி கட்டுமான பணியை செய்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று காலை இவருடன் பணியாற்றும் அரவிந்த் என்பவர் இவரை எழுப்ப சென்ற போது இவர் இறந்து கிடந்துள்ளார். நீண்ட நாட்களாக இவர் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி இவரது உறவினர் அஜய் சேவியர் (23) கொடுத்த புகாரின்பேரில் இந்நகர்பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Tags :
Next Story