கொரோனாவுக்கு பெண் உள்பட 5 பேர் பலி


கொரோனாவுக்கு பெண் உள்பட 5 பேர் பலி
x
தினத்தந்தி 16 Aug 2021 1:29 AM IST (Updated: 16 Aug 2021 1:29 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பெண் உள்பட 5 பேர் பலியாகினர். மேலும் 127 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

சேலம், ஆக.16-
சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பெண் உள்பட 5 பேர் பலியாகினர். மேலும் 127 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு 100-ஐ தாண்டி வருகிறது. நேற்று முன்தினம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 130 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று மேலும் 127 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 28 பேரும், சேலம் ஒன்றிய பகுதியில் 73 பேரும், ஆத்தூர் ஒன்றிய பகுதிகளில் 16 பேரும், நகராட்சி பகுதிகளில் 10 பேரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் உள்பட மாவட்டத்தில் கொரோனாவுக்கு 94 ஆயிரத்து 817 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
5 பேர் பலி
ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 97 பேர் குணமடைந்துவிட்டதால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 949 பேருக்கு ஆஸ்பத்திரிகளில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் கொரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் சேலத்தை சேர்ந்த 43, 53, 56 வயதுடைய ஆண்கள் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் பலியாகினர். மேலும் 43 வயதுடைய ஆணும், 55 வயதுடைய பெண்ணும் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பலியாகினர். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 1,610 பேர் பலியாகி உள்ளனர்.

Next Story